கத்தாரில் மேலும் 3 சுகாதார மையங்களிலும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

Three more health centres
Pic: The Peninsula

கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் டிசம்பர் 23ம் தேதி முதல் ஏழு சுகாதார மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டவர்களான 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட பராமரிப்பில் உள்ள பெரியவர்கள், கடுமையான நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தொலைபேசி அல்லது SMS மூலம் தொடர்பு கொள்ளப்படுகிறது.

COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்ட கத்தார் அமீர்.!

இந்நிலையில், கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி மேலும் மூன்று சுகாதார மையங்களில் நடைபெறும் என முதன்மை சுகாதாரக் கழக (PHCC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

COVID-19 தடுப்பூசிகள் தற்போது கத்தார் பல்கலைக்கழகம், அல் வாப் (Al Waab) மற்றும் அல் கோர் சுகாதார மையங்களிலும் கிடைக்கும் என்றும், மேலும் இறுதியில் நாட்டின் அனைத்து சுகாதார மையங்களிலும் தடுப்பூசி கிடைக்கும் என PHCC நிர்வாக இயக்குநர் Dr. Mariam Ali Abdulmalik கூறியுள்ளார்.

கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் டிசம்பர் 23ம் தேதி ஏழு சுகாதார மையங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பத்து சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியை பெற நடவடிக்கை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…