கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!

weather report during weekend
Pic: @qatarweather

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) இந்த வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், முதலில் பனிமூட்டமான வானிலை நிலவும் என்றும், சில நேரங்களில் மேகங்களுடன் தூசி காற்று வீசும் என்றும், வார இறுதி வரை இரவு நேரங்களில் குளிர் நிலவும் என்றும் கணித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் அதிக கடல் அலைகள் காரணமாக வியாழக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக QMD தெரிவித்துள்ளது.

கத்தாரில் விரைவாக நடைபெறும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

இந்த வானிலை காரணமாக, அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களைய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்த காலகட்டத்தில் அனைத்து கடல் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும்
QMD வலியுறுத்தியுள்ளது‌.

கத்தாரில் இந்த வார இறுதியில் மிகக் குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை முறையே 15 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வார இறுதியில், குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்துறை ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 4,482 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…