கத்தாரில் குளிர்கால சந்தைகள் இந்த மாத இறுதியில் தொடக்கம்.!

Winter markets selling local produce
Pic: The Peninsula Qatar

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த பருவத்திற்கான குளிர்கால காய்கறி சந்தைகளை அக்டோபர் 29ஆம் தேதி முதல் திறக்கும் என அறிவித்துள்ளது.

அக்டோபர் 29 முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பண்ணைகளிலிருந்து வரும் புதிய காய்கறிகள் ஐந்து உள்ளூர் உற்பத்தி முற்றங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு.!

இந்த சந்தைகள் Al Sheehaniya, Al Mazrouha, Al Wakrah, Al Khor-Al Zakhira மற்றும் Al Shamal ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

இந்த குளிர்கால சந்தைகள், போட்டி விலையில் இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக புதிய உள்ளூர் விவசாய பொருட்களை வழங்குகிறது.

மேலும், இந்த சந்தைகள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து சிறப்பு முகாம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…