கொரோனா அப்டேட் (மே 27): கத்தாரில் இன்று ஒரே நாளில் 1,439 பேர் குணம். இருவர் பலி.!

கத்தாரில், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 30வது மரணம், 1,740 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 1,439 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (27-05-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின்  எண்ணிக்கை 48,947ஆக உயர்ந்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இருவர் பலி‌.!

மேலும், COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாகவும் MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில், இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,439 நபர்கள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 13,283ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 4,769 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 2,01,180 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.