கத்தாரில் இன்று ‌(செப் 10) புதிதாக 206 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

206 Covid-19 cases and 232 recoveries reported in Qatar on Sept 10
Pic: Iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 206 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 232 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (10-09-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 121,052ஆக உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் சாலைகளில் வாகனங்கள் வலது புறமாக முந்துவது போக்குவரத்து விதிமீறல்; MOI ட்வீட்.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 232 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,978ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 4,071 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 6,76,170 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் மூன்று பேர் பலி.!

Editor

சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது..!

Editor

COVID-19; கத்தாரில் புதிதாக 756 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Editor