COVID-19; கத்தாரில் இன்று (ஆகஸ்ட் 15) மேலும் 2 பேர் பலி; புதிதாக 277 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Nov 11
Pic: iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணம், 277 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 247 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (15-08-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,14,809ஆக உள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 192ஆக உயர்ந்துள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 247 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,505ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 3,767 பேருக்கு ஆய்வுக் சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை 5,46,285 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/

?Telegram https://t.me/tamilmicsetqatar