COVID-19 : கத்தாரில் புதிதாக 250 பேருக்கு பாதிப்பு; மொத்தம் 1,325ஆக உயர்வு.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 250 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 16 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் ‌இன்று (04-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,325ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்கள், கத்தார் திரும்பிய பயணிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் 16 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 109ஆக உள்ளது.

சோதனைகள்

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 3,538 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 31,951 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.