கொரோனா விதிமீறல்: கத்தாரில் இன்று மேலும் 263 பேர் மீது நடவடிக்கை.!

263 Peoples COVID19 violations
Pic: Qatar Day

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கத்தாரில் இன்று (23-02-2021) முகக்கவசம் அணிய தவறிய 241 பேரை உள்துறை அமைச்சகம் (MoI) பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

சீன அதிபரிடமிருந்து எழுத்துப்பூர்வ செய்தியை பெற்றார் கத்தார் அமீர்.!

மேலும், ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்தால் 21 பேர் மீது அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கத்தாரில் இதுவரை முகக்கவசம் அணிய தவறியதற்காக 14,784 பேர் மற்றும் வாகனத்தில் நான்கு பேருக்கு மேல் சென்றதற்காக 636 நபர்களையும் அமைச்சகம் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு   பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கத்தாரில் இதுவரை 140,000க்கும் மேற்பட்ட COVID-19 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.!