கத்தார் நாட்டைச் சேர்ந்த 34 பேர் நாடு திரும்பினர்..!

34 Qatari citizens return to Doha.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்ப விரும்பிய கத்தார் குடிமக்களை அழைத்து வர கத்தார் மாநிலத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அல்ஜீரியா மற்றும் துனிசியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 34 கத்தார் குடிமக்கள் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். ‌

மேலும், 34 கத்தார் குடிமக்களுடன் சேர்த்து பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 95 பேர் இந்த விமானத்தில் வந்ததாகவும் கத்தார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்பு நடைமுறைகளின்படி, நாடு திரும்பிய அனைவரும் 14 நாட்களுக்கு சுகாதார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.