கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று தொடங்கிய ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை.!

Afghanistan Peace Negotiation that began yesterday in Doha
Pic: Twitter/QNA

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அங்கே சண்டையிட்டு வரும் குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் ‌நேற்று (12-09-2020) தொடங்கியது.

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தை தலிபான்களுக்கும், ஆப்கன் அரசு மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் நேற்று தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள இரத்ததான மையங்களில் அவசரத் தேவைகளுக்காக இரத்ததானம் செய்ய அழைப்பு..!

கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த பேச்சுவாா்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிரந்தர போா் நிறுத்தம், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள், ஆயிரக்கணக்கான தலிபான்களும், அரசு ஆதரவு சிறுபடைக் குழுக்களும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த பேச்சுவாா்த்தையில் இடம் பெறவுள்ளன என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pic: QNA

ஆப்கானிஸ்தான் அரசு சார்பில், 21 பேரை கொண்ட பிரதிநிதிகள் குழு, தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பங்கேற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தையை நடத்தியதற்காக, கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் தலைவர் Mullah Abdul Ghani Baradar அவர்கள் கத்தார் அமீர் ‌HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…