கத்தார் To திருச்சி நேரடி விமானச் சேவை; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடக்கம்..!

Air India Express starts Doha-Trichy service.

இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து கத்தார் நாட்டிற்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து, கத்தார் தோஹாவுக்கு நேரடி விமான சேவையை 2020 மார்ச் 31 முதல் தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதன்மை செயல் அலுவலர் ஷ்யாம் சுந்தர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கத்தாரில் புதிதாக மூன்று பூங்காக்கள் திறப்பு..!

இந்த விமானமானது, வாரத்திற்கு மூன்று முறை (செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை) ஆகிய தினங்களில் மட்டுமே இயங்கும் என்றும், மேலும் இந்த விமான சேவையானது, கத்தார் நேரப்படி, அதிகாலை 1.30 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 3.40 மணிக்கு தோஹாவுக்கு வந்து சேரும் என்றும், தோஹாவிலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, காலை 11:55 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் தரை இறங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில், 33 கி.மீ ஒலிம்பிக் சைக்கிள் பாதை திறப்பு..!

கத்தாரிலிருந்து, திருச்சிரப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு முதல் நேரடி விமானம் இதுவாகும்.