கத்தார் அல் கோர் பகுதியிலுள்ள Al Bayt பூங்கா இன்று முதல் திறப்பு.!

Pic: The Peninsula

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் ஒரு பகுதியாக, கத்தார் அல் கோர் பகுதியில் அமைந்துள்ள Al Bayt பூங்கா உடற்பயிற்சிக்காக இன்று (18-06-2020) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக Supreme Committee for Delivery & Legacy அறிவித்துள்ளது.

மேலும், இந்த குழு தனது சமூக ஊடக கையாளுதல்கள் மூலம் பார்வையாளர்களை சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக இணங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தாரில் முதல் கட்டமாக கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள பூங்காக்களின் பட்டியல்:

  • Al Bidda Park
  • Al Wakra public park
  • Al Khor park
  • Park 66 – Al Qatifia
  • Al Shamal City Park
  • Al Shamal park
  • Al Sailiya Park – Abu Nakhleh
  • MIA Park
  • Al Dafna Park
  • Al Rayyan Park

Source: The Peninsula Qatar