கத்தார் Al Farkiah கடற்கரைக்கு வாரம் இருமுறை இவர்கள் மட்டும் செல்ல அனுமதி.!

Al Farkiah Beach
Pic: MME

கத்தாரில் உள்ள Al Farkiah கடற்கரைக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) தெரிவித்துள்ளது.

ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக Al Farkiah கடற்கரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என MME குறிப்பிட்டுள்ளது.

துருக்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கத்தார் அரசு உதவ தயார்..!

மேலும், வாரத்தின் மீதமுள்ள நாட்களில் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை குடும்பங்கள் Al Farkiah கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று

நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…