கத்தாரில் அல் கோர் கார்னிவல் திருவிழா துவக்கம்; அனைவருக்கும் அனுமதி இலவசம்.!

Al Khor Carnival begins
Pic: Shaji Kayamkulam/Gulf-Times

கத்தாரில் அல் கோர் கார்னிவல் நேற்று முன்தினம் (23-01-2021) முதல் Al Bayt ஸ்டேடியம் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது.

அல் கோர் கார்னிவல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவிருந்த நிலையில், எதிர்பாராத வானிலை நிலைமை காரணமாக திறப்பு சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டது.

கத்தாரில் போலீஸ் கல்லூரியின் மூன்றாம் தொகுதி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: கத்தார் அமீர் பங்கேற்பு.!

Al Bayt Stadium பூங்காவில் நடைபெறும் இந்த திருவிழா மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும், இந்த திருவிழாவிற்கு  நுழைவு கட்டணம் இலவசம், ஆனால், சவாரிகளுக்கு QR 10 ரியால் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு QR100 ரியால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த திருவிழாவில், வேடிக்கை சவாரிகள், கலாச்சார நடவடிக்கைகள், முழு குடும்பத்திற்கும் ஷாப்பிங், அல் கோர் கார்னிவலில் சிறப்பு நிகழ்ச்சிகள், உணவு கடைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கத்தாரில் உள்ள புனித குர்ஆன் கற்றல் மையங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறப்பு.!