கத்தாரில் மோசமான வானிலை: அல் கோர் கார்னிவல் திருவிழா ஒத்திவைப்பு.!

Al Khor Carnival postponed
Pic: The Peninsula

கத்தாரில் நேற்று (21-01-2021) முதல் தொடங்கவிருந்த அல் கோர் கார்னிவல் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாராத வானிலை நிலைமை காரணமாக அல் கோர் கார்னிவல் திருவிழா திறப்பு ஜனவரி 23ம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் அமைப்பாளர்கள் ட்வீட்டரில் கூறியுள்ளனர்.

கத்தாரில் கோலாகலமாக தொடங்கும் அல் கோர் கார்னிவல் திருவிழா.!

அல் Bayt Stadium பூங்காவில் 15 நாள் திருவிழா நடைபெறும் இந்த திருவிழா ஜனவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 6ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில், வேடிக்கை சவாரிகள் (fun rides) கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

கத்தாரில் பெரும்பாலான பகுதிகளில் மோசமான வானிலை.!