கத்தார் அல் சாத் கால்பந்து அணியின் மேலாளருக்கு கொரோனா.!

Photo: Twitter/AlsaddSC

கத்தார் அல் சாத் (Al Sadd) கால்பந்து கிளப்பின் மேலாளரும், ஸ்பெயின் முன்னாள் கால்பந்து வீரருமான சேவியர் ஹெர்ணாண்டஸ் என்கிற ஸவி (Xavi) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கத்தார் ஸ்டார்ஸ் லீக் போட்டியில் பணியாற்றியபோது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்றும், நல்ல உடல்நிலையில் உள்ளேன் என்றும், விதிமுறைகளின்படி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயின் அணிக்காக 133 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2010 உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வெல்வதற்கு ஸவி முக்கியக் காரணமாக இருந்தார். 2014 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், இவர் பார்சிலோனா கிளப்புக்காக 505 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அல் சாத் அணிக்காக 2015 முதல் விளையாடி வந்தார். பிறகு, 2019இல் அந்த அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார்.

Source: Dinamani

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5