தோஹாவில் உள்ள அல் சைலியா மத்திய சந்தையில் ஏலம் நடத்த அனுமதி.!

Al Sailiya Central Market
Pic: The Peninsula

COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தோஹாவில் உள்ள அல் சைலியா (Al Sailiya) மத்திய சந்தையில் ஏலம் நடத்த அனுமதிக்கப்படுவதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) அறிவித்துள்ளது.

அல் சைலியா மத்திய சந்தை அதன் திறனில் 50 சதவீதத்திற்கு ஏலம் நடத்த அனுமதிக்கப்படும் என MoPH-இன் தொழில் சுகாதாரத் தலைவர் Dr Mohammed Ali Mohammed Al Hajjaj தெரிவித்துள்ளார்.

தோஹா, ஷார்ஜா இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம்.!

அல் சைலியா மத்திய சந்தையில் நடவடிக்கைகள் பாதுகாப்பாகவும், திறமையாகவும் இயங்குவதை உறுதி செய்வதற்காக ஏல மண்டபத்திற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமைச்சகம் ஒன்றிணைத்துள்ளது.

அல் சைலியா மத்திய சந்தையில் உள்ள அனைத்து விற்பனையாளர்களும் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான, முகக்கவசம் அணிவது, கையுறைகள் அணிவது, உடல் வெப்பநிலை 37°C-க்கும் குறைவாக இருப்பது மற்றும் EHTERAZ செயலில் பச்சை நிறத்தை காண்பிப்பது போன்றவற்றை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வழக்கமான சோதனைகளுக்கு உட்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் உள்ள இந்த பகுதி மூடப்படுவதாக பொதுப்பணி ஆணையம் அறிவிப்பு.!

அல் சைலியா மத்திய சந்தையில் வெவ்வேறு வகை ஏலங்கள் தனி நேர இடங்களில் நடைபெறும் என்றும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பிரிக்க தடைகள் இருக்கும் என்றும் MoPHஇன் தொழில் சுகாதாரத் தலைவர் கூறியுள்ளார்.

அல் சைலியா மத்திய சந்தையில் 52 கடைகளைக் கொண்ட பாரம்பரிய சந்தையும், சில்லறை சந்தையில் 102 கடைகளும், மொத்த சந்தையில் 50 கடைகளும் அடங்கும். பழம் மற்றும் காய்கறி வர்த்தகத்திற்கு சேவை செய்வதற்காக சந்தை பல இணைக்கப்பட்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…