கத்தார் Al Tarfa சந்திப்பு மேம்படுத்தல் பணிக்கு பிறகு திறப்பு.!

Pic: The Peninsula

கத்தார் பொதுப்பணித்துறை ஆணையம் (Ashghal) புதிய சாலைகள் அமைக்கும் பணிகளில் கூடுதலாக, Al Tarfa சந்திப்பு மற்றும் அதன் உள்கட்டமைப்பு சேவை பயன்பாடுகளின் முக்கிய மேம்படுத்தல் பணிகளை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கிரேட்டர் தோஹா திட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் முடிக்கப்பட்ட Al Tarfa சந்திப்பு மற்றும் சாலைகள் தற்பொழுது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

கத்தார் தோஹாவில் 7 கி.மீ நீளமுள்ள புதிய சாலை திறப்பு.!

இந்த Al Tarfa சந்திப்பு, Jeryan Nejaima பகுதி மற்றும் Wadi Al Banat பகுதிகளுக்கு இணைப்பை வழங்குகிறது. மேலும், அப்துல்லா பின் கலீஃபா ஸ்டேடியம் மற்றும் தோஹா Gulf Club ஆகியவற்றை சென்றடையும் உதவுகிறது.