கத்தாரில் மழைக்காலம் தொடக்கம்; இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

Chances thundery rain
Image Credits: Gulf-Times

கத்தாரில் இன்று (16-10-2020) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் திடீர் பலத்த காற்றுடன் மழை பொழியும் என்றும் கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

முக்கியமாக, வடகிழக்கு காற்று 5-15 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது 25 கிலோமீட்டர் வரை எடக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:  கத்தாரில் இன்று முதல் புதிய சீசன் தொடக்கம்.!

தோஹாவில் இன்று வெப்பநிலையானது 26 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கத்தார் நாட்டில் இன்று முதல் Al Wasmi சீசன் தொடங்க உள்ளதாக கத்தார் வானிலை ஆய்வுதுறை (QMD) தெரிவித்துள்ளது. மேலும், இந்த சீசன் 52 நாட்கள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த சீசனில், பருவமழை பெய்தால் ஜெரனியம் (Geranium) போன்ற உள்ளூர் தாவரங்கள் வளர உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை பொருள்கள் பறிமுதல்; ஒருவர் கைது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…