கத்தாரில் போலீஸ் கல்லூரியின் மூன்றாம் தொகுதி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: கத்தார் அமீர் பங்கேற்பு.!

Amir attends graduation ceremony
Pic:Amiri Diwan

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (23-01-2021) அல் சைலியாவில் உள்ள போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் மூன்றாம் தொகுதி போலீஸ் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி, ஓமன் உள்துறை அமைச்சர் HE Sayyid Hamoud bin Faisal Al Busaidi மற்றும் ஜோர்டான் உள்துறை அமைச்சர் HE Sameer Ibrahim ஆகியோர் கலந்து கொண்டனர்.

கத்தார் அமீர் இரு நாட்டு உள்துறை அமைச்சர்களுடன் சந்திப்பு.!

இந்த விழாவில் பட்டதாரிகள் அணிவகுப்பு, இராணுவ அணிவகுப்பு மற்றும் புனித குர்ஆன் வசனங்களை படித்த பிறகு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் சிறந்த ஏழு பட்டதாரிகளை கெளரவித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களை வரவேற்று, போலீஸ் கல்லூரி இயக்குநர் Brigadier Al Marri அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம் நடைபெற்றது.!

இந்த விழாவின் இறுதியில், மூன்றாம் தொகுதி அதிகாரிகள் சத்தியப்பிரமாணம் செய்து கல்லூரி கீதத்தை நிகழ்த்தினார்கள்.