கத்தார் நாட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை; கத்தார் அமீர் அழைப்பு.!

Amir calls Istisqaa Prayer
Pic: QNA

கத்தார் நாட்டில் நாளை மறுநாள் (05-11-2020) வியாழக்கிழமை அன்று காலை சரியாக 6:00 மணியளவில் நாடு முழுவதும் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வேண்டி நடைபெறும் சிறப்பு தொழுகையில், கலந்து கொள்ள கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், கத்தார் அமீர்‌ அவர்கள் அல்-வாஜ்பா (Al-Wajba) பிரார்த்தனை மைதானத்தில், வழிபாட்டாளர்கள் கூட்டத்துடன் மழை வேண்டி நடைபெறும் சிறப்பு தொழுகையில் பங்கேற்க உள்ளார்.

கத்தாரில் மழை வேண்டி நடைபெறும் பிரார்த்தனை இடங்களின் பட்டியலை Awqaf தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…