ஓமான் நாட்டின் 50வது தேசிய தினம்: கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

Amir condolences Saudi King

ஓமான் நாட்டில் வரலாற்றின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றான ஓமான் தேசிய தினம் இன்று (18-11-2020) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று ஓமான் தேசிய தினத்தை முன்னிட்டு, ஓமான் சுல்தான் HM ஹைதம் பின் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் அனுப்பினார்.

கத்தாரில் கட்டாய இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்; MOI

இதேபோல், கத்தார் துணை அமீர் H H ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி மற்றும் கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்களும் ஓமான் சுல்தான் HM ஹைதம் பின் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஓமானில் தேசிய கொண்டாட்டங்களுக்கான பொதுச் செயலகமானது கொரோனாவிற்கான உச்சக்குழுவின் ஒருங்கிணைப்புடன், தேசிய தினத்தை முன்னிட்டு இன்று நிகழ்த்தப்படும் வான வேடிக்கைகளை பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்குள் இருந்தே கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் இந்திய தூதரகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…