அமெரிக்காவின் அதிபரானார் ஜோ பைடன்: கத்தார் அமீர் வாழ்த்து.!

Amir congratulates US President
Pics: USA Today/Amiri Diwan

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் நேற்று (20-01-2021) பதவியேற்றுக்கொண்டனர்.

அமெரிக்காவின் அரசமைப்பை பாதுகாப்பதில் என்னால் ஆன அனைத்து சிறப்பான முயற்சிகளையும் எடுப்பேன், அதிபர் பதவிக்கு உண்டான நேர்மையுடன், உண்மையாக பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன் என்று ஜோ பைடன் பிரமாணம் எடுத்துகொண்ட பின்னர் அமெரிக்காவின் 46வது அதிபரானார்.

அமீரகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

இதையடுத்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் அனுப்பினார்.

ஜோ பைடன் தனது கடமைகளில் வெற்றி பெறவும், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைய விரும்புவதாகவும் கத்தார் அமீர் தெரிவித்தார்.

கத்தாரில் கோலாகலமாக தொடங்கும் அல் கோர் கார்னிவல் திருவிழா.!