கத்தார் அமீரின் உத்தரவின் பேரில், லெபனானுக்கு அவசர மருத்துவ உதவி..!

Urgent medical assistance to Lebanon

கத்தார் அபிவிருத்திக்கான நிதி (QFFD) லெபனானுக்கு (Lebanon) அவசர மருத்துவ உதவியை அனுப்பியுள்ளது. கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, லெபனானில் உள்ள சகோதரர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அங்கு அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

கத்தார் ஏர்வேஸ் மூலம் வழங்கப்பட்ட இந்த மருத்துவ உதவியில், 10 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டுள்ளதாக QFFD அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கத்தார் வழங்கிய இந்த மருத்துவ உதவி கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை சமாளிக்க சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கான அதன் ஆதரவின் கட்டமைப்பிற்குள் வருகிறது என்றும் மேலும், ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தொற்றுநோயின் பரவலை எதிர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு ஒரு பங்களிப்பு என்றும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.