கத்தார் அமீர் சூடான் நாட்டிற்கு அவசர நிவாரண உதவிகள் அனுப்ப உத்தரவு..!!

Amir directs to send urgent aid to Sudan
Pic: Qatar Living

கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் காலிஃபா பின் காலிஃபா பின் அப்துல்அஜீஸ் அல்தானி அவர்கள் நேற்று (06-09-2020) சூடான் நாட்டின் பிரதமர் HE Dr. Abdalla Hamdok அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில், சூடான் நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரங்கலையும், மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கத்தார் பிரதமர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக மேலும் 6 பேர் கைது‌.!

சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் விளைவுகளைத் தணிக்க, சூடானுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவுகளைப் பற்றி சூடான் பிரதமரிடம் கத்தார் பிரதமர் கூறினார்.

பின்னர், சூடான் பிரதமர், கத்தார் நாட்டின் உதவி மற்றும் நிரந்தர நிலைப்பாட்டிற்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தோஹா மெட்ரோ The Pearl-Qatar பகுதியை இணைக்கும் புதிய மெட்ரோலிங்க் சேவை அறிமுகம்.!  

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…