துருக்கி நாட்டிற்கு வந்தடைந்தார் கத்தார் அமீர்.!

Amir Heads To Turkey
Pic: ahalqatar

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று காலை (26-11-2020) தோஹாவிலிருந்து புறப்பட்டு துருக்கி நாட்டின் தலைநகரமான அங்காராவுக்கு வந்தடைந்தார்.

கத்தார்-துருக்கி உச்ச குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் துருக்கி அதிபர் HE Recep Tayyip Erdogan தலைமை தாங்குவார்கள்.

தோஹா Al Bidda தெருவில் உள்ள பாதை மூன்று மாதங்களுக்கு மூடல்.!

இந்த ஆறாவது அமர்வில், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து கருத்துகள் பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துருக்கி தலைநகர் அங்காராவுக்கு கத்தார் அமீருடன் இன்று ஒரு உத்தியோகபூர்வ தூதுக்குழுவும் சென்றுள்ளது.

கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…