கத்தாரில் இன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை; அமீர் நாட்டு மக்களுடன் பங்கேற்பு.!

Amir performs Istisqaa prayer
Pic: QNA

கத்தார் நாட்டில் இன்று (05-11-2020) காலை சரியாக 6:00 மணியளவில் நாடு முழுவதும் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மழை வேண்டி நடைபெறும் சிறப்பு தொழுகைக்காக, Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் 78 மசூதிகளை தயார் செய்திருந்தது.

இதையடுத்து, கத்தாரில் இன்று பல மசூதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கார்களில் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி – உள்துறை அமைச்சகம்.!

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களுடன் அல்-வாஜ்பா தொழுகை மைதானத்தில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

அமீரின் தனிப்பட்ட பிரதிநிதிகள், H H ஷேக் ஜாசிம் பின் ஹமாத் அல் தானி, HH ஷேக் அப்துல்லா பின் கலீஃபா அல் தானி, HH ஷேக் முஹம்மது பின் கலீஃபா அல் தானி மற்றும் HE ஷேக் ஜாசின் பின் கலீஃபா அல் தானி ஆகியோரும் தொழுகையில் பங்கேற்றனர்.

ஷூரா கவுன்சில் சபாநாயகர் HE Ahmed bin Abdullah bin Zaid Al Mahmoud மற்றும் மேன்மை ஷேக்குகள், அமைச்சர்கள் ஆகியோரும் தொழுகையில் பங்கேற்றனர்.

படங்கள்:

கத்தாரில் உள்ள இந்த சந்திப்பு 5 மாதங்களுக்கு மூடல் – MOI அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…