COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்ட கத்தார் அமீர்.!

Amir receives Covid-19 vaccine
Pic: Insta/@tamim

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (30-12-2020)  முதல் டோஸ் COVID-19 தடுப்பூசியை சுகாதார மையத்தில் போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து கத்தார் அமீர் அவர்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில், இன்று நான் COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டேன், இந்த தொற்றுநோயிலிருந்து அனைவரும் பாதுகாப்படைய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க கத்தார் அமீருக்கு சவுதி மன்னர் அழைப்பு.!

கத்தாரில் முதல் கட்ட COVID-19 தடுப்பூசி திட்டம் டிசம்பர் 23ம் தேதி முதல் நியமிக்கப்பட்ட PHCC சுகாதார மையங்களில் தொடங்கியுள்ளது.

COVID-19 தடுப்பூசி போடும் திட்டத்தின் முதல் கட்டமாக, பல மூத்த அதிகாரிகள் மற்றும் front line ஊழியர்கள் Pfizer-BioNTech நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசியைப் பெற்று வருகின்றனர்.

கத்தாரில் விரைவாக நடைபெறும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…