சூடானின் முன்னாள் பிரதமர் மரணம்: கத்தார் அமீர் இரங்கல்.!

Amir Sends condolences
Pic: SUNA

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சூடான் நாட்டின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி (Sadiq Al Mahdi) உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

இதுகுறித்து சாதில் அல் மஹ்தி குடும்பம் தரப்பில், ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாதிக் அல் மஹ்தி மூன்று வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் வரும் பயணிகளுக்கு மறு நுழைவு எளிதாகிறது; தானியங்கி மூலம் அனுமதி.!

சூடானின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் சூடானின் இடைக்கால இறையாண்மை கவுன்சிலின் தலைவரான Lt. Gen. Abdel Fattah Al Burhan அவர்களிடம் இரங்கலைத் தெரிவித்தார்.

சூடான் நாட்டில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமர் சாதிக் அல் மஹ்தி ஆவார். 1989ஆம் ஆண்டுக்கு பின்பு சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

சவுதியில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…