அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன்; கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

Amir condolences Saudi King

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபராக போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று முன்தினம் (07-11-2020) அவரது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பக்கத்தில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கத்தாரில் பல கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!

கத்தார் அமீர் அவர்கள் ட்வீட்டில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் ஹமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

மேலும், அமெரிக்க மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள், நம் நாடுகளுக்கு இடையேயான நட்பை தொடர்ந்து வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் எனக் கூறினார்.

இதேபோல், கத்தார் துணை அமீர் H H ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி மற்றும் கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு கத்தார் அமீர் வாழ்த்து..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…