கத்தார் தேசிய விளையாட்டு தினம்: விடுமுறையை அறிவித்தது அமிரி திவான்.!

Amiri Diwan announces holiday
Pic: Shutterstock

கத்தார் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தின் செவ்வாய்க்கிழமை அன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கத்தாரில் நாளை மறுநாள் (09-02-2021) தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 9ம் தேதி பொது விடுமுறை விடப்படும் என அமிரி திவான் இன்று அறிவித்துள்ளது.

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.!

கத்தாரில் COVID-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காகவும், சமூகப் பாதுகாப்பின் நலனுக்காகவும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் குறித்து பிப்ரவரி 3ம் தேதி  வெளியிடப்பட்ட அமைச்சர்கள் குழுவின் முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் ஓட்டம், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்டவை தனிப்பட்டதாக மட்டுமே இருக்கும் என முடிவு செய்யப்பட்டது என்று குழு வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பந்து போட்டிகள் போன்ற உடல் தொடர்புடைய விளையாட்டுக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், பல அணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டியிடும் விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை என்றும், விளையாட்டு தினத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் வருகை அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் கத்தார்.! கடந்த மாதத்தில் சுமார் 3.5 மில்லியன் காய்கறிகள் விற்பனை.!