தோஹாவில் உள்ள இந்த வீதி மூன்று மாதத்திற்கு மூடல்.!

Ashghal closure Three months
Pic: Ashghal

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து, Al Arab வீதிக்கும் B-Ring சாலைக்கும் இடையில் உள்ள Ibn Dirham வீதியின் இரு திசைகளும் வருகின்ற (13-02-2021) சனிக்கிழமை முதல் மூன்று மாதத்திற்கு மூடுப்படுவதாக அறிவித்துள்ளது.

B-Ring சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்கட்டமைப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு இந்த மூடலானது மேற்கொள்ளப்படுகிறது.

கத்தாரில் தெரு நாய்களுக்கு தங்குமிடம் அளிக்கும் திட்டம் தொடக்கம்.!

Ibn Dirham வீதியைப் பயன்படுத்த விரும்பும் சாலை பயனர்கள் தங்கள் இடங்களை அடைய Al Bara bin Malik வீதி மற்றும் Al Urouba விதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு இந்த மூடல் குறித்து அறிவுறுத்தும் விதமாக சாலை அடையாளங்களை பொதுப்பணி ஆணையம் நிறுவும் என்றும், அனைத்து சாலை பயனர்களும் வேக வரம்பைக் கடைப்பிடிக்குமாறு பொதுப்பணி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் தற்காலிகமாக மூடல்.!