கத்தார் அஷ்கல், தொழில்துறை பகுதியில் 2 சந்திப்புகளை திறந்துள்ளது.!

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal), தொழில்துறை பகுதி வீதிகள் 41 மற்றும் 1110 மற்றும் கிழக்கு தொழில்துறை தெருவில் தெற்கு கலெக்டர் சாலையில் இரண்டு புதிய சந்திப்புகளை திறந்துள்ளதாக தனது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளது.

இந்த புதிய திறப்புகள், பொது போக்குவரத்து இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன என்றும் மேலும், அவை தொழில்துறை பகுதி, தொழில்துறை பகுதி சாலை, ஜி ரிங் சாலை மற்றும் ஹமாத் துறைமுக சாலை ஆகியவற்றுக்கு இடையில் போக்குவரத்துக்கு எளிதான அணுகலை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.