கத்தார் பொதுப்பணி ஆணையம் புதிய UNDERPASS பாலத்தை திறந்துள்ளது.!

Ashghal opens new underpass and bridge on Mesaimeer Interchange.

கத்தார் பொதுப்பணி ஆணையம் அஷ்கால் (Ashghal) ஒரு புதிய அண்டர்பாஸ் (underpass) பாலத்தை மெசமீர் இன்டர்சேஞ்சில் (Mesaimeer Interchange) போக்குவரத்து பொது இயக்குநரகத்துடன் இணைந்து இன்று (05.04.2020) திறந்து வைத்துள்ளது.

இந்த பாதையானது அல் வக்ரா மற்றும் அல் வுகேர் நோக்கி தொழில்துறை பகுதி சாலை மற்றும் ஈ ரிங் சாலையை இணைக்கிறது.

இந்த, 750 மீட்டர் கொண்ட அண்டர்பாஸ் (underpass) பாதையானது தொழில்துறை பகுதி சாலையில் இருந்து தோஹா அதிவேக நெடுஞ்சாலையின் தெற்கு பகுதி நோக்கி இலவச ஓட்ட (free flow) போக்குவரத்தையும், இ ரிங் சாலையில் இருந்து போக்குவரத்தை இணைக்க 560மீ நீளமுள்ள பாலத்தையும் வழங்குகிறது.