தோஹாவில் புதிய வடிவிலான மின் கம்பங்களை அமைக்க Ashghal கையெழுத்து.!

Ashghal signs contracts
Pic: Ashghal

கத்தாரில் சாலைகள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவதற்கான மேற்பார்வைக் குழுவின் பணிகளுக்குள், தோஹா கார்னிச் மற்றும் மத்திய தோஹா பகுதிகளை மேம்படுத்த 2,600 அலங்கார மின் விளக்குகள் வழங்க பொதுப்பணி ஆணையம் (Ashghal) இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

அஷ்கல் தலைவர் Dr Eng Saad bin Ahmed Al Muhannadi நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

கத்தாரில் ராணுவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: அமீர் பங்கேற்பு.!

புதிய மின் கம்பங்களில் கத்தார் அடையாளத்தை பிரதிபலிக்கும் சிறப்பு வடிவமைப்பு அம்சங்கள் உள்ளன. தோஹா கார்னிச்சில் நிறுவப்பட உள்ள மின் கம்பங்களில் பனை ஓலை மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மத்திய தோஹா தெருக்களில் இலைகள் வடிவிலான மின் கம்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2,600 லைட்டிங் கம்பங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தோஹா கார்னிச்சில் உள்ள Ras Bu Abboud பாலம் முதல் தோஹா Cityscape பகுதி வரை 10 கி.மீ நீளத்திற்கு இது நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!