கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 4 பேர் கைது‌.!

Authorities arrest five violating
Pic: The Peninsula

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ மேலும் நான்கு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (15-01-2021) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட மூத்த அதிகாரிகள்.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  • Abdulaziz Gul Youssef
  • Mohammed Yunis Youssef Gul
  • Mohammed Saeed Ali Ahmed Abu Hadiya
  • Ramesh Garang

தோஹாவில் உள்ள அல் சைலியா மத்திய சந்தையில் ஏலம் நடத்த அனுமதி.!