கத்தாரில் பல கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!

Authorities arrest man
Pic: MOI

கத்தார் நாட்டில் உள்ள பல கடைகளில் கொள்ளையில் ஈடுபட்ட வந்த அரபு நாட்டை சேர்ந்த ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

கடைகளில் இருந்து திருட்டு தொடர்பான தகவல்கள் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், சந்தேகிக்கப்பட்ட நபர்
தேவையான அனுமதிகளுடன் கைது செய்யப்பட்டார்.

கத்தார் வடகிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை..!

கடைகளில் இருந்து திருடப்பட்ட பல பொருட்கள் அந்த நபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அதிகாரிகளிடம் அனுப்பப்படும் என்றும், அவருக்கு எதிரான சட்ட நடைமுறைகளை முடிக்க பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற கொள்ளை சம்பவங்களிலிருந்து பாதுகாக்க, கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களை நிறுவுமாறு குற்றவியல் புலனாய்வுத் துறை பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.‌

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு கத்தார் அமீர் வாழ்த்து..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…