கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3 பேர் கைது‌.!

Authorities arrest three people for violating home quarantine conditions
Pic: The Peninsula Qatar

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ மேலும் 3 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (13-10-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து சிறப்பு முகாம்.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  • Ahmed Yousef Ahmed Nasser Al Hamidi.
  • Mohsen Hamad Mohsen Bajash Bajash.
  • Abdulaziz Mohammed Ali Qahes Al Yami.

முன்னதாக, கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் Al Waab பிரதான பாலம் ஐந்து நாட்கள் மூடல்; அஷ்கல் அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…