உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் காலமானார்..!

Bahrain PM Died
Pic: File/BNA

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் இன்று (11-11-2020) காலமானார், அவருக்கு வயது 84.

ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் காலமானார் என அந்நாட்டு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து அவரது உடல் சொந்த வீட்டிற்கு வந்தபின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் நாட்டில் பிரதமராகவும், அரசியல்வாதியாகவும் ஷேக் கலீஃபா இருந்து வந்துள்ளார்.

1971ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்போது வரை ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா பிரதமராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற பெருமைக்குரியராவார்‌.

COVID-19: கத்தாரில் இன்று (நவ.11) ‌புதிதாக 224 பேர் பாதிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…