இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம் நடைபெற்றது.!

Blood donation camp
Pic: QITC

இந்தியாவில் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) மற்றும் ஹமாத் மருத்துவ கழகம் (HMC) இணைந்து நேற்று (22-01-2021) இரத்ததான முகாமை‌‌ நடத்தியது.

கொரோனா தொற்று மற்றும் தனிமனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 144 நபர்கள் கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர்.

கத்தாரில் உள்ள புனித குர்ஆன் கற்றல் மையங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறப்பு.!

உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர், 99 நபர்கள் இந்த இரத்ததானம் முகாமில் இரத்ததானம் செய்தனர்.

இந்த முகாமில், கத்தர் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

தோஹா, துபாய் இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம்.!