கத்தாரில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பிரச்சாரம் தொடக்கம்.!

Campaign remove abandoned vehicles
Pic: MME

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MME) கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் கூட்டுக் குழு நேற்று (10-01-2021) ஞாயிறுக்கிழமை முதல் Al Khor மற்றும் Al Zakhira நகராட்சி முழுவதும் உள்ள பல இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

கைவிடப்பட்ட வாகனங்களை நகராட்சியிலிருந்து அகற்றுவதை நோக்கமாக கொண்ட இந்த பிரச்சாரம் இரண்டு வாரங்களுக்கு செயல்படும் என தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது 3 ஆண்டுகால தடை; கத்தாரிலிருந்து சவுதிக்கு முதல் விமானம் புறப்பட்டது.!

இந்த பிரச்சாரத்தின் முதல் வாரத்தில் நகராட்சியின் பல்வேறு இடங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக Al Khor மற்றும் Al Zakhira நகராட்சியின் பொது கண்காணிப்பு பிரிவின் செயல் தலைவர் Talal Al Ruwaili தெரிவித்துள்ளார்.

Al Khor பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றியதற்கு பின்னர் நகராட்சியின் பிற இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படும் என்றும், இந்த பிரச்சாரத்தில் ஏராளமான மக்களுக்கு வாகனங்களின் விளைவுகள் குறித்து போதிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சவுதியில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

மேலும், கைவிடப்பட்ட வாகனங்களின் மீது எச்சரிக்கை ஸ்டிக்கர்களை வைத்து, வாகனங்களை அகற்ற உரிமையாளர்களுக்கு கூட்டுக் குழுவின் ஆய்வாளர்கள் மூன்று நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளனர் மற்றும் ஒரு வாகனம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், எந்த எச்சரிக்கையும் இல்லாமல் உடனடியாக அகற்றப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த கைவிடப்பட்ட வாகனங்கள் சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான காரணிகளைத் தவிர்த்து, இப்பகுதியின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தடையாக உள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…