கத்தாரில் நாளை முதல் பரவலான மழைக்கு வாய்ப்பு; QMD ட்வீட்.!

Chances of scattered rain in parts of Qatar from Tuesday
Pic: The Peninsula Qatar

கத்தாரில் நாளை செவ்வாய்க்கிழமை (29-09-2020) முதல் அக்டோபர் 1 (வியாழக்கிழமை) வரை நண்பகல் நேரத்தில் உள்ளூர் வெப்பச்சலன மேக வளர்ச்சிக்கு வாய்ப்பு இருப்பதாக கத்தார் வானிலை ஆய்வுத் துறை (QMD) தெரிவித்துள்ளது.

மேலும், கத்தாரின் சில பகுதிகளில், பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில நேரங்களில் இது இடியுடன் கூடியதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 வழிகாட்டுதல்களை மீறிய மசாஜ் பார்லர் மூடல்..!

இந்த காலகட்டம் உள்நாட்டில் “Qalaid Alwasmi” என்று அழைக்கப்படுகிறது, (இது மழைக்கு சாதகமான பருவத்திற்கு முன்னதாக உள்ளது) இது அக்டோபர் நடுப்பகுதியில் தொடங்கும் என கத்தார் வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வலுவான காற்று வீசுவதால் தூசி மற்றும் மோசமான தெரிவுநிலை ஏற்படும் என்றும் QMD கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் மெட்ரோலிங்க் M110 பேருந்து சில நிறுத்தங்களில் அதன் சேவையை நிறுத்தி வைத்துள்ளது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…