கத்தாரில் இந்த வார இறுதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!!

Chances thundery rain
Image Credits: Gulf-Times

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில பகுதிகளில் தூசி காற்று மற்றும் இடியுடன் கூடியதாக இருக்கலாம் என்றும், பகல் நேரங்களில் வெப்பமான வானிலை நிலவும் என்றும் கணித்துள்ளது.

மேலும், கரைக்கு அருகில் மோசமான தெரிவுநிலை குறித்தும், அத்துடன் இரண்டு நாட்களுக்கு தீடீர் வலுவான காற்று குறித்தும் வானிலை ஆய்வுத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 5 பேர் கைது‌.!

கத்தாரில் இன்று (11-09-2020) மற்றும் நாளை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 31 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் இன்று காற்று வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கி 8 கி.மீ முதல் 18 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் இடங்களில் 28 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை சனிக்கிழமையில் காற்று வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கி 5 கி‌.மீ முதல் 15 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் இடங்களில் 25 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் சாலைகளில் வாகனங்கள் வலது புறமாக முந்துவது போக்குவரத்து விதிமீறல்; MOI ட்வீட்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…