கத்தாரில் இன்று முதல் பரவலான மழைக்கு வாய்ப்பு.!

Chances scattered rain from today
Pic: QMD

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) அதன் முன்னறிவிப்பில், இன்று (07-11-2020) நாடு முழுவதும் மேகங்களின் உருவாக்கம் தொடர்ச்சியாக உள்ளது என்றும் இதனால் சில இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், மழைக்கான வாய்ப்புகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இடியுடன் கூடிய மழை மற்றும் தீவிர மழையாகவும், பலத்த காற்றுடன் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் அமீரின் பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு இந்திய தூதர் வரவேற்பு.!

கத்தாரில் நாளை (08-11-2020) பலத்த காற்று மற்றும் அதிக அலைகளுடனும் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடல் எச்சரிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத்துறை அனைவரையும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து கடல் சார்ந்த நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தாரில் இதுவரை 1 மில்லியனுக்கு மேல் கொரோனா பரிசோதனை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…