கத்தாரில் நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

Chances thundery rain
Image Credits: Gulf-Times

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வருகின்ற வியாழக்கிழமை முதல் அடுத்த வாரம் தொடக்கம் வரை பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

நவம்பர் 26 (வியாழக்கிழமை) முதல் அடுத்த வாரம் தொடக்கம் வரை மேகங்களின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தார் விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய் கண்டுபிடிப்பு.!

பகல் நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவில், வெவ்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில்,  இடியுடன் கூடிய மழையின் போது காற்று முக்கியமாக தென்கிழக்கில் மிதமான மற்றும் புதிய வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FIFA உலகக் கோப்பை: பிரத்தியேகமான கத்தார் ஏர்வேஸ் விமானம்.!

சில நேரங்களில், குறைந்த தெரிவுநிலை மற்றும் தூசியுடன் கூடிய காற்றின் வேகம் 30 கிலோமீட்டரை விட அதிகமாக இருக்கும் என்றும், கடல் அலை 8 அடிக்கு மேல் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த காலக்கட்டத்தில் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களையும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு QMD வலியுறுத்தியுள்ளது.

கத்தார் இந்திய தூதரகம் பாஸ்போர்ட் சேவைகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…