கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை முதல் குளிர்காலம் தொடக்கம்…!!

Chilly weather to return from Sunday in Qatar. (image source : The peninsula qatar)

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் பல நாட்கள் நீடிக்கக்கூடிய குளிரானது நாட்டையே பாதிக்கும் வாய்ப்புள்ளதாக கத்தார் வானிலை ஆய்வு துறை தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

மேலும், கத்தார் வானிலை ஆய்வு துறை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வடமேற்கு திசையில் புதிய வலுவான காற்றுடன் சுத்துவட்ட பகுதிகளில் உயர் அழுத்த அமைப்பு விரிவாக்கப்படுவதால் இது ஏற்படுகிறது என்று கூறியுள்ளது.

காற்றின் வேகம் 15 முதல் 25 கி.மீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது கடலுக்குள் 30கி.மீ ஐத் தாண்டியும் மற்றும் 40 கி.மீ. கடலுக்கு தொலைவில் அடிக்கும் என்பதால் சில பகுதிகளில் 3 கி.மீ. வேகத்தில் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குளிர்ச்சியின் போது, ​​வெப்பநிலை 14°C முதல் 17°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் குறைந்தபட்சம் 5°C முதல் 12°C வரை தொடும் வாய்ப்புள்ளது. காற்று வீசும் சூழ்நிலை காரணமாக, வெப்பநிலை இயல்பாக இருப்பதை விட மிகக் குறைவாக இருக்கும் என்று கத்தார் வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.

இது போன்ற சூழ்நிலைகளின் போது குடியிருப்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து கடல் நடவடிக்கைகளையும் தவிர்க்கவும் மற்றும் கத்தார் வானிலை ஆய்வு துறையின் சமூக ஊடக பதிவின் மூலம் சமீபத்திய தகவல்களை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.