கத்தார் மாலின் துணை மின் நிலையத்தில் லேசான புகை; சிவில் பாதுகாப்பு உடனடியாக கட்டுப்படுத்தியது..!

Civil Defence successfully controls slight smoke at an electrical substation near Mall of Qatar
Pic: Qatar Civil Defence

கத்தார் மாலின் (Mall Of Qatar) துணை மின்நிலையத்தில் (electrical substation) நேற்று (07-09-2020) லேசான புகை கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கத்தார் சிவில் பாதுகாப்பு உடனடியாக அங்கு விரைந்து புகையை கட்டுப்படுத்தியது.

இதுகுறித்து கத்தார் உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், மாலுடன் இணைக்கப்பட்ட துணை மின் நிலையத்திலிருந்து லேசான புகை கண்டறியப்பட்டது என்றும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிவில் பாதுகாப்பு மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ரயில் 300 குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்துமிடங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது..!

மேலும், இந்த சம்பவத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தார்‌ 2022 FIFA கால்பந்து போட்டிகளை நடத்த இப்பொழுதே தயார்..!

Editor

கத்தாரில், பொது தூய்மை துறையின் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு.!

Editor

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம்..!

Editor