பிப்ரவரி 18, 2021: கத்தாரில் இன்றைய கொரோனா நிலவரம்.!

Corona update Qatar Feb18
Photo: iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 462 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 265 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (18-02-2021) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 159,053ஆக உள்ளது.

கத்தாரில் உள்ள பிரபல சஃபாரி மால் மீண்டும் திறப்பு.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 265 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 149,031ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 10,397 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,486,833 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் 47 நிறுவனங்கள் தொழிலாளர் அமைச்சகம் அதிரடி நடவடிக்கை.!