ஜனவரி 14, 2021: கத்தாரில் இன்றைய கொரோனா நிலவரம்.!

Corona update Qatar Jan14
Pic: Abdul Basit/ The Peninsula

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 209 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 167 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (14-01-2021) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 146,689ஆக உள்ளது.

கத்தாரில் COVID-19 தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி; MoPH மறுப்பு.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 167 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,261ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 12,894 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,306,477 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தார் – சவுதி எல்லை திறந்த மூன்றே நாளில் இத்தனை வாகனங்கள்…அடேங்கப்பா.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…