COVID-19: கத்தாரில் இன்று (நவ.21) புதிதாக 174 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Nov 21

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 174 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 186 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (21-11-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 137,062ஆக உள்ளது.

கத்தார் தூதரகம் லைபீரியா நாட்டிற்கு மருத்துவ உதவிகள் வழங்கல்.!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 186 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,100ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 8,106 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,075,890 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தார் பண்ணைகளின் தயாரிப்புகளுக்கான புதிய விழா தொடக்கம்

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…